வனப்பகுதியில் மனித மண்டை ஓட்டை கண்டெடுத்த பள்ளி மாணவர்கள்: திகில் தருணம்

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியின் வனப்பகுதியில் சிறுவர்கள் கண்டெடுத்த மனித தலை மண்டை ஓடு, பல மாதங்களுக்கு முன்னர் தலையில்லாமல் வெறும் உடலுடன் கிடந்தவருடன் ஒத்துப் போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் Cologne நகரில் சில தினங்களுக்கு முன்னர் வனப்பகுதியில் பள்ளி சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்குள்ள மரத்தின் இலைகளுக்கு மத்தியில் உடல் இல்லாத மனித தலையின் மண்டை ஓட்டை அவர்கள் பார்த்துள்ளனர்.

அதனுடன் கை, கால் எலும்புகள் போன்றவற்றையும் பார்த்த அவர்கள் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார், கடந்த கோடை காலத்தில் தலையில்லாமல் வெறும் உடல் மட்டும் கிடந்த நபருடன் தற்போது கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு பொருந்துகிறதா என DNA சோதனை செய்து பார்த்தார்கள்.

அதில், இரண்டு விடயங்களும் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் வயது 20லிருந்து 35க்குள் இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் அவர் யார் என்ற விபரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இளைஞரின் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட வனப்பகுதியில் ஆய்வு செய்த பொலிசார் இன்னும் சில எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது அதுகுறித்து சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்த நபர் எப்படி இறந்தார் மற்றும் அவரை கொன்றது யார் என்பது குறித்த தடயம் விரைவில் கிடைக்கும் என அதிகாரிகள் நம்புகிறார்கள்.

இதனிடையில் கொலையானவர் அணிந்திருந்த டீ சர்ட் மற்றும் ஷூக்களின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் மெத்தை, படுக்கை போன்றவைகளும் இருந்துள்ளன. அதனுடன் பீர் பாட்டில்கள் , சிகரெட்களும் அங்கு கிடைத்துள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments