அகதிகளுக்காக ஜேர்மன் அரசு செலவிட்ட தொகை எவ்வளவு? வெளியான பட்டியல்

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் புகலிடம் பெற்றுள்ள மற்றும் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளுக்காக 2016-ம் ஆண்டில் மட்டும் 20 பில்லியன் யூரோவை அந்நாட்டு அரசு செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனி நாட்டில் புகலிடம் பெறுவதற்காக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.

மேலும், ஏற்கனவே புகலிடம் பெற்றவர்களுக்கும், புகலிடம் பெறுவதற்காக காத்திருப்பவர்களுக்கும் மற்றும் சட்டவிரோதமாக ஜேர்மனியில் புகலிடம் பெறுவதை தடுப்பதற்கும் என அந்நாட்டு அரசு 20 பில்லியன் யூரோவை செலவிட்டுள்ளது.

குறிப்பாக ஜேர்மனியில் உள்ள 16 மாகாணங்களுக்கு 2016-ம் ஆண்டில் 9.3 பில்லியன் யூரோ வழங்கப்பட்டது.

இந்த தொகையானது, புகலிடம் பெற்றவர்களுக்கும் மற்றும் புகலிடத்திற்காக காத்திருப்பவர்களுக்கும் செலவிடப்பட்டது.

எஞ்சிய 11 பில்லியன் யூரோ தொகையானது ஜேர்மனியில் சட்டவிரோதமாக புகலிடம் கோருவது, அகதிகளை கடத்தி வருவது மற்றும் அகதிகளை மாற்று இடங்களுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி நாட்டில் உள்ள மாகாணங்களில் அகதிகளுக்காக செலவிடுவதற்கு North Rhein-Westphalia என்ற மாகாணத்திற்கு தான் அதிகளவில்(1.2 பில்லியன் யூரோ) நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments