ஜேர்மனியில் தாக்குதல் நடத்த முயன்ற அகதிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற அகதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சிரியா நாட்டை சேர்ந்த 16 வயதான வாலிபர் ஜேர்மனியில் புகலிடம் கோரி Cologne நகரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வாலிபரின் நடவடிக்கைகளில் மர்மம் இருப்பதாக முகாமில் தங்கியிருந்தவர்கள் பொலிசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர்.

இத்தகவலை தொடர்ந்து வாலிபரின் நடவடிக்கையை பொலிசார் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வாலிபரை மடக்கிய பொலிசார் அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

அப்போது, ஐ.எஸ் தீவிரவாதி ஒருவருடன் வாலிபர் அடிக்கடி பேசி வந்ததும், ஜேர்மனியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த நான் தயாராக இருப்பதாக வாலிபர் செய்தி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

வாலிபரின் சதித்திட்டம் வெளியானதை தொடர்ந்து பொலிசார் அவரை உடனடியாக கைது செய்தனர்.

வாலிபர் மீதான வழக்கு விசாரணை கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கியது.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது வாலிபர் மீதான அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது.

வாலிபரின் வயதை கருத்தில் கொண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்து வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments