யானைகளை அடித்து துன்புறுத்திய பயிற்சியாளர்: அதிர்ச்சி வீடியோ வெளியானது

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் உள்ள வனவிலங்கு பூங்காவில் யானைகள் பயிற்சியாளர்களால் கொடுமைப்படுத்தப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் உலக புகழ்பெற்ற Hanover வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. அங்கு எடுக்கபட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில், பெரிய மற்றும் சிறிய யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. அதற்கு பயிற்சி தரும் பயிற்சியாளர்கள் யானைகளை சவுக்காலும், கொம்பாலும் அடிக்கிறார்கள்.

யானையின் ஒரு காலை தூக்கி சொல்லி அடிப்பது, யானையை சுத்த சொல்லி அடிப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

இதை ரகசிய ககெமரா மூலம் விலங்குகள் நல அமைப்பான பீட்டா வீடியோ எடுத்துள்ளது.

மேலும், பீட்டா இது குறித்து பொலிஸ் புகார் அளித்துள்ளது

தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவுவதையடுத்து வனவிலங்கு ஊழியர்களுக்கும், அதன் உரிமையாளருக்கும் கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து வனவிலங்கு உரிமையாளர் Andreas Casdorff கூறுகையில், மனிதர்களுக்கும், யானைக்கும் உறவுமுறையை ஏற்படுத்த இப்படி பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

யானைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கேற்றார் போல் நாங்கள் செயல்படுவோம் என கூறியுள்ளார்.

கொலை மிரட்டல் வந்துள்ளதால் பொலிசார் இங்கு பாதுகாப்பு கொடுத்ததுடன், இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments