ஜேர்மனியில் இலங்கை இளைஞன் மீது கொடூர தாக்குதல்

Report Print Vethu Vethu in ஜேர்மனி

மூன்று ஜேர்மன் நாட்டவர்களினால் இலங்கை அகதி ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

22 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர் தனது விடுதிக்கு செல்லும் வழியில் இவ்வாறு மூன்று நபர்களினால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதலினால் இலங்கை அகதி கடும் காயமடைந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஒரு பேருந்து நிலையத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜேர்மன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments