ரயில் நிலையத்தில் குண்டு வைத்த தீவிரவாதி: ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்து தகர்க்க முயன்ற தீவிரவாதி ஒருவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த Marco Gabel(29) என்ற தீவிரவாதிக்கு தான் நீதிமன்றம் இந்த கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மேற்கு ஜேர்மனியின் தலைநகராக திகழ்ந்த Bonn நகர ரயில் நிலையத்தில் தீவிரவாதி வெடிகுண்டு வைத்துள்ளான்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக வெடிகுண்டு வெடிக்காமல் போனதால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

இச்சதித்திட்டத்தில் ஈடுப்பட்ட மேலும் 3 தீவிரவாதிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

Koray Durmaz(28) மற்றும் Enea Buzo(46) ஆகிய இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், Tayfun Sevim(27) என்ற தீவிரவாதிக்கு 9 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நிகழாவிட்டாலும், குழாய் வெடிகுண்டுகளை பொலிசார் கண்டுபிடித்தபோது நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தில் 27 வழக்கறிஞர் நிபுணர்கள் மற்றும் 17 சாட்சியங்களின் அடிப்படையில் நீதிபதி இந்த கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments