பத்திரிகையை படிப்பதற்காக உயிரை விட்ட நபர்: இப்படியும் கொலை நிகழுமா?

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் பத்திரிகை தாமதமாக வருவதாக புகார் கூறிய நபர் ஒருவரை டெலிவரி ஊழியர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் உள்ள Lüneburg நகரில் 51 வயதான நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இவரது வீட்டிற்கு உள்ளூர் வாராந்திர பத்திரிகை ஒன்றை 42 வயதான நபர் ஒருவர் ஒவ்வொரு வாரமும் டெலிவரி செய்து வந்துள்ளார்.

ஆனால், குறிப்பிட்ட நாளில் பத்திரிகையை டெலிவரி செய்யாமல் தாமதமாக அளிப்பதாக நபர் அடிக்கடி புகார் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம்போல ஊழியர் தாமதமாக பத்திரிகையை டெலிவரி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டு உரிமையாளர் டெலிவரி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் தகராறாக முற்றியதை தொடர்ந்து இருவருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது.

அப்போது, திட்டம்போட்டு ஏற்கனவே கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஊழியர் சரமாரியாக உரிமையாளரை குத்தியுள்ளார்.

இக்காட்சியை கண்ட உறவினர் அலறியடித்துக்கொண்டு வந்து தாக்கியவை சிறைப் பிடித்துள்ளார்.

தாக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பத்திரிகையை டெலிவரி செய்த ஊழியரை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments