நியாயம் கிடைக்காமல் ஊருக்கு செல்ல மாட்டேன்: கொந்தளித்த ஜேர்மன் பெண்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஜேர்மன் நாட்டு பெண்ணின் பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்ற ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை 2 நபர்கள் சேர்ந்து அருகில் உள்ள சவுக்குதோப்பில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பெண்ணின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், மதுபோதையில் இருந்த இரண்டுபேர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளனர்.

கடற்கரையிலிருந்த அந்தப்பெண்ணின் கை, கால்களைக் கட்டிய அந்த இரண்டு பேர், சப்தம் போடாமலிருக்க வாயையும் பொத்தி சவுக்கு தோப்புக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கேதான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சில சிக்கல்கள் உள்ளன. இதில் குற்றவாளிகள் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு தடயங்களை அழித்துள்ளனர்.

இருப்பினும், எங்களுக்கு கிடைத்துள்ள சில தடயங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை மிக விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் வாரணாசி சென்றுள்ள ஜேர்மன் பெண் பொலிசாரிடம் கூறியதாவது, தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்கும் வரை சொந்த ஊருக்குச் செல்ல மாட்டேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இதற்கு பொலிசாரும், விரைவில் குற்றவாளிகளைப் பிடித்து உங்கள்முன் நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

மாமல்லபுரத்தில் ஜேர்மன் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக விசாரித்து வரும் பொலிசார், அவரிடம் 600 புகைப்படங்களைக் காண்பித்துள்ளனர். மேலும், 36 பேரை அவர் முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments