ஜெர்மன் குடியுரிமை கோரும் பிரித்தானியர்கள்: காரணம் என்ன?

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதை அடுத்து பிரித்தானியர்கள் ஜெர்மன் குடியுரிமை கோருவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் முடிவை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என ஜெர்மனியில் வாழும் 106,000 பிரித்தானியர்கள் ஒருமித்த குரலுடன் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி ஜெர்மன் குடியுரிமை கோரிக்கையையும் அங்குள்ள பிரித்தானியர்கள் விடுத்துள்ளனர்.

பெரும்பாலான பிரித்தானியர்கள் ஐரோப்பா முழுமையும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி பணி புரியவும் பயணம் மேற்கொள்ளவும் உரிமை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் பிரித்தானியா வெளியேறும் நிலையில் குறித்த கோரிக்கை என்பது வீண் என்றே கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் முடிவை எடுக்கும் வரை ஒன்றியத்தின் கட்டுப்பாடில் உள்ள 28 நாடுகளிலும் பணி புரியவும் குடியிருக்கவும் எவ்வித தடங்கலும் இருந்ததில்லை என தெரிவிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தற்போது அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரித்தானியாவில் குடியிருக்கும் மக்கள் தங்களை கருத்தில் கொள்வதில்லை என தெரிவிக்கும் அவர், தற்போது ஜெர்மனியின் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

ஜெர்மனியை பொறுத்தமட்டில் இருநாட்டு குடியுரிமை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் அல்லாத நாட்டினருக்கு அளிப்பதில்லை. இதனால் ஜெர்மனியில் இருக்கும் பிரித்தானியர்கள் உரிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே ஜெர்மனியில் குடியிருக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments