ஜேர்மனியில் பாதசாரி மீது வாகனம் ஏற்றி கொலை முயற்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் பாதசாரி மீது வாகனம் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட சாரதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய முனிச் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள Schwabing பகுதியில் பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தார் 26 வயதான எத்ரிஸ் என்பவர்.

அப்போது இவரை அணுகிய இரண்டு பெண்கள் அருகாமையில் உள்ள மதுபான விடுதிக்கு வழி கேட்டுள்ளனர்.

இந்நேரம் இந்த 3 நபர்களையும் அச்சுறுத்தும் வகையில் ஒரு கார் ஒன்று அதிக வேகத்தில் இவர்களை கடந்து சென்றுள்ளது. இதில் கோபம் கொண்ட எத்ரிஸ் குறித்த வாகனத்தின் சாரதியை திட்டியதுடன் தமது கைமுட்டியால் குறித்த வாகனத்தின் சன்னலில் முட்டியுள்ளார்.

இதில் ஆத்திரம் கொண்ட அந்த வாகன சாரதி 58 வயதான மார்ட்டின் என்பவர் தமது வாகனத்தை திருப்பி எடுத்து வந்து எத்ரிஸ் மற்றும் அந்த பெண்கள் நின்றிருந்த பகுதியில் வந்து வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

மட்டுமின்றி வாகனத்தை அவர்கள் மீது மோதும் வகையில் செலுத்திய போது பெண்கள் இருவரும் பயத்தில் அலறிக்கொண்டு இன்னொரு வாகனத்தின் பின்னால் ஒளிந்துள்ளனர்.

ஆனால் எத்ரிஸ் மட்டும் அங்கு அசையாமல் நின்றுள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் கொண்ட சாரதி மார்ட்டின் வாகனத்தை எத்ரிஸ் மீது வேண்டும் என்றே ஏற்ற முயன்றுள்ளார்.

இதில் எத்ரிஸ் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், மார்ட்டின் மீதே முழு தவறும் இருப்பதாகவும், பாதசாரியை வாகனம் ஏற்றி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

கோபத்தின் உச்சியில் தமது வாகனத்தையே ஆயுதமாக பயன்படுத்தி கொலை செய்ய முயன்றது நீதிமன்றத்திற்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் சாரதி மார்ட்டினுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி Norbert Riedmann தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments