நாடு கடத்தப்படும் ஜேர்மானியர்: எதற்காக?

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியை சேர்ந்த நபர் விமான நிலையத்துக்கு வரும் பெண்களை தாக்குவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்தவர் Stephan Brode (44), இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சுற்றுலா விசாவில் பிரேசிலுக்கு வந்தார்.

மீண்டும் தன் சொந்த நாட்டுக்கு போக பணம் இல்லாததால் Stephan பிரேசிலின் Sao Paulo விமான நிலையம் அருகிலேயே தங்கியுள்ளார். இதனிடையில், விமான நிலையத்துக்கு வரும் பெண்களை தாக்குவதாக Stephan மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிசிடிவி கமெராவில் அவர் ஒரு பெண்ணை அடிப்பது போன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதுவரை மொத்தம் 7 பெண்களை தாக்கியதாக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அப்படி தான் செய்யவில்லை என Stephan மறுத்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், Stephan-ன் விசா காலாவதி ஆகிவிட்டது, அவர் பிரேசிலை விட்டு வெளியேற எட்டு நாள் கெடு கொடுக்கப்பட்டுள்ளது.

இதை அவர் செய்யவில்லை என்றால் நாடு கடத்தப்படுவார் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments