ஜேர்மன் விமான விபத்தில் 150 பேர் பலி: புதிய தகவல் வெளியிடும் விமானியின் தந்தை

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 150 பேர் பலியானது தொடர்பாக துணை விமானியின் தந்தை முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்ஸ் என்ற பயணிகள் விமானம் கடந்த 2015-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் விபத்துக்குள்ளானது.

உலகையே அதிர வைத்த இந்த விபத்திற்கு துணை விமானியான 27 வயதான ஆண்ட்ரியா லூபிட்ஸ் தான் காரணம் எனக் கூறப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி மாதம் முடிவு பெற்றது. ‘விபத்திற்கு முழுக் காரணம் துணை விமானி தான்’ எனக் கூறி அதிகாரிகள் விசாரணையை முடித்துள்ளனர்.

இந்நிலையில், துணை விமானியின் தந்தையான Gunter Lubitz(63) என்பவர் இன்று முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘என் மகன் மிகவும் பொறுப்பானவன். தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு அவர் கோழை அல்ல.

அதே சமயம், எந்தச் சூழலிலும் தன்னுடன் 149 பேரையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொள்ள அவர் இரக்கமற்றவர் அல்ல’ என தந்தை விளக்கம் அளித்துள்ளார்.

’இந்த விபத்து தொடர்பாக நிறைய விடயங்களை பொலிசார் விசாரணை செய்யவில்லை. ஒருவேளை, இவற்றை விசாரிக்க அதிகாரிகள் விரும்பவில்லை என்று தான் நான் எண்ணுகிறேன்’ என தந்தை பதிலளித்துள்ளார்.

எனினும், பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் அவர் கூடுதலான தகவல்கள் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அவை மீண்டும் விசாரணையை துவக்க வாய்ப்பாகவும் அமையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments