ஜேர்மனியில் பயங்கரம்: சாலையில் நடந்து சென்ற இளம் பெண் முகத்தில் ஆசிட் வீச்சு

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியின் பெர்லின் நகரில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் பெர்லின் நகரின் கிழக்கு பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் 27 வயதுடைய இளம்பெண் ஆளில்லா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் பைக்கில் வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவர் முகத்தில் ஊற்றி விட்டு ஓடியுள்ளார்.

வலியால் துடித்த அந்த பெண் சத்தம் போட்டதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கண்களில் படுகாயம் ஏற்ப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே 4 நடந்துள்ளன, இது ஐந்தாவதாகும்.

ஐந்திலுமே இளம் பெண்கள் தான் குறி வைக்கப்பட்டுள்ளனர். அந்த சம்பவங்களுக்கும், இதுக்கும் தொடர்புள்ளதா என தீவிரமாக விசாரித்து வருகிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments