ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகரில் லொறி மூலம் தாக்குதலில் ஈடுப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதியை இத்தாலி பொலிசார் சுட்டு கொன்றுள்ளனர்.
ஜேர்மனியின் மிகப்பெரிய நகரான பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பெரிய மார்க்கெட் போடப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் நிறைந்த அந்த இடத்தில் கடந்த 19ஆம் திகதி அதிவேகமாக வந்த லொறி அங்குள்ள கடைகளின் மீது மோதியதில் 12 பேர் பலியானார்கள், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள்.
பின்னர் இந்த செயலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தானே முன்வந்து பொறுப்பேற்று கொண்டது.
இந்த நிலையில் லொறியில் இருந்த கைரேகையை ஆராய்ந்த பொலிசார் Anis Amri (24) என்ற தீவிரவாதி தான் இந்த தாக்குதலை செய்தான் என உறுதி செய்து அவனை தேடி வந்தார்கள்.
இத்தாலி நாட்டின் வடக்கு மிலான் பகுதியில் பதுங்கியிருந்த அவனை அந்நாட்டு பொலிசார் சுற்றி வளைத்தார்கள்.
பின்னர் பொலிசாருக்கும் அவனுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் Anis சுட்டுக் கொல்லப்பட்டான்.
பொலிசார் அவனை சுட்டு, அவன் இறக்கும் தருவாயில் ’அல்லாஹூ அக்பர்’ என்று கூறிக் கொண்டே உயிரிழந்தான் என் பொலிசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே ஜேர்மனியில் நெதர்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஓபர்ஹவுசன் நகரில் வர்த்தக நிலைய கட்டிடத் தொகுதிக்குள் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரண்டு பேரை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
இவர்களை ஜேர்மனிய பொலிஸார் இன்று அதிகாலை இவர்களை கைது செய்துள்ளனர். கொசோவே நாட்டை பிறப்பிடமாக கொண்ட 28 மற்றும் 31 வயதான சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.