ஆளும் கட்சி தலைவராக ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் தெரிவு

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஜேர்மனியில் ஆளும் கட்சியின் தலைவராக ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் சான்சலராக இருப்பவர் ஏஞ்சலா மெர்க்கல், கடந்த 2005ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியான கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சியின் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஏஞ்சலா மெர்க்கல் தெரிவு செய்யப்பட்டுள்ளார், இவருக்கு 89.5 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

பல்வேறு விமர்சனங்களை சந்தித்த போதும் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஞ்சலா மெர்க்கலும் தொடர்ந்து 4வது முறையாக சான்சலராக பதவி வகிக்க விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments