ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியின் மகளை கற்பழித்து கொன்ற நபர்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் ஆப்கான் அகதி இளைஞன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியின் மகளை கற்பழித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Freiburg பகுதியலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான Dr Clemens Ladenburgerயின் 19 வயது மகளான Maria Ladenburger என்ற இளம் பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று Maria Ladenburger வீடு திரும்பிக்கொண்டிருந்த போது குறித்த அகதி அவரை வழிமறித்து இச்செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், உடலை நதியில் மூழ்கடித்துள்ளான்.

இந்த நபருக்கு ஏற்கனவே ஒரு பெண் கொலை வழக்குடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் அகதியை கைது செய்து விசாரணை செய்ததில் அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான், இச்சம்பவம் ஜேர்மனி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments