ஜேர்மனி சாலையில் இளம் பெண்ணிற்கு நேர்ந்த கதி! வலியால் துடிதுடித்த பரிதாபம்

Report Print Basu in ஜேர்மனி
290Shares

ஜேர்மனியில் மர்ம நபர் ஒருவர் இளம் பெண்ணின் கழுத்தில் கயிறு கட்டி காரில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lower Saxony மாநிலத்தில் Hameln நகரிலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

38 வயதான நபர் ஒருவர், 28 வயது பெண்ணின் கழுத்தில் கயிறு கட்டி காருடன் இணைத்து காரை ஓட்டிச்சென்றுள்ளார். இதில், தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், குற்றவாளி தானாகவே பொலிசில் சரணடைந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை பொலிசார் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது, அறுவை சிகிச்கை செய்யப்பட்டுள்ள பெண் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்திற்கான பின்னணி காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. குற்றவியல் நிபுணர்கள் தடயங்களை பாதுகாத்து வருகின்றனர். மேலும், பொலிசார் சாட்சிகளை தேடி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments