ஆன்லைனில் விற்பனைக்கு வந்த கைக்குழந்தை: அதிர வைத்த அகதிகள்

Report Print Basu in ஜேர்மனி

ஜேர்மனியில் பிறந்து 40 நாட்களான பெண் குழந்தையை பிரபல ஓன்லைன் தளமான eBay- யில் விற்க முற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சம்பவம் குறித்து Duisburg நகர பொலிசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிசார் அளித்துள்ள தகவலில், eBay-யில் மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை 5000 யூரோவிற்கு (ரூ. 3 லட்சம்) விற்க போட்டோவுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து பெற்றோர்களின் குடியிருப்பில் நடத்திய சோதனையில், குறித்த போஸ்டர் அங்கிருந்த இணையதளம் மூலம் பதிவிட்டதற்கான ஆதாரம் சிக்கியது.

மேலும் குறித்த இணைப்பை குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பயன்படுத்தி வந்துள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பெற்றோர்கள் அகதிகள் என தெரியவந்துள்ளது. மேலும். மனித கடத்தல் என்ற சந்தேகத்தில் பேரில் பெற்றோர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments