விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதி: நிகழ்ந்த அதிரடி திருப்பம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஒருவன் சிறையில் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள விமான நிலையத்தை தகர்க்க சதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.இதனை செயல்படுத்த சிரியா நாட்டில் இருந்து அகதி என்ற போர்வையில் Jaber Albakr(22) என்ற நபர் ஜேர்மனிக்கு வந்துள்ளார்.

இவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என பொலிசார் சந்தேகித்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், நபர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெடி பொருட்கள் உள்ளதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

இந்த தகவலை பெற்று பொலிசார் அங்கு சென்றபோது நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். ஆனால், இரண்டு நாட்களுக்கு பிறகு சிரியா நாட்டை சேர்ந்த மற்றொரு அகதியால் Leipzig என்ற நகரில் தீவிரவாதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில், நேற்று நபர் அடைக்கப்பட்டிருந்த அறையை பொலிசார் சோதனை செய்தபோது உள்ளே அந்த தீவிரவாதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளான்.

எனினும், தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments