புலம்பெயர்ந்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதை தடை செய்ய முடிவு

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் வேலையில்லாத காரணத்தினால் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அரசின் நிதியுதவியை பெறுவதை 5 ஆண்டுகளுக்கு தடை செய்ய சான்சலர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியில் அகதிகளை அதிகளவில் அனுமதிக்கும் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இந்த எதிர்ப்புகள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலுக்கு ஒரு கடும் சரிவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களை கட்டுப்படுத்து சான்சலர் முடிவு செய்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வரலாம்.

ஆனால், வேலையில்லாத காரணத்தினால் இவர்களுக்கு அரசு வழங்கும் நிதியுதவியை 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படும்.

இந்த புதிய சட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றவுடன் உடனடியாக அமுலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனி நாட்டிற்கு வரும் ஆப்பிரிக்க அகதிகளை தடுக்கும் வகையில் ஆப்பிரிக்காவில் உள்ள 3 நாடுகளுக்கு சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் நாளை பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments