அகதிகளால் ஆட்டம் காணும் ஜேர்மனி! 16 வயது சிறுவன் அதிரடி கைது

Report Print Jubilee Jubilee in ஜேர்மனி

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சிரியாவை சேர்ந்த 16 வயது சிறுவனை ஜேர்மனி பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த யூலை மாதம் ஜேர்மனியில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினால் 2 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

Wuerzburg என்ற இடத்தில் ரயில் தாக்குதலும், Ansbach என்ற இடத்தில் வெடிகுண்டு தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது. இந்த இரண்டு தாக்குதலுமே தஞ்சம் கோரி வந்தவர்களால் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று சிரியாவை சேர்ந்த 16 வயது சிறுவனை ஜேர்மனி பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவனது மொபைல் போனை சோதித்த போது அவன் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளம் நபர்களை ஐஎஸ் அமைப்பில் சேர்த்துவிடும் பணியை அவன் செய்து வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற இளம் நபர்களால் நாட்டிற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாநில பாதுகாப்பு அதிகாரிகள், இந்த வழக்கை விசாரிக்க 35 விசாரணை குழுவை நியமித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments