பெற்ற குழந்தைகளை ஜன்னல் வழியாக வீசிய தந்தை: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வந்த தந்தை ஒருவர் தனது 3 பிள்ளைகளை அடுக்குமாடி ஜன்னலில் இருந்து வீசிய குற்றம் தொடர்பான விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

சிரியா நாட்டை சேர்ந்த பெற்றோர் தங்களது 3 பிள்ளைகளுடன் ஜேர்மனியில் குடியேறியுள்ளனர். மேலும் இவர்களது குடும்பம் Bonn நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜேர்மனியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் வாழ்க்கை முறையை தானும் அனுபவிக்க வேண்டும் என அவரது மனைவி கணவனிடம் கேட்டுள்ளார்.

ஆனால், இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற ஒரு சூழலில் கடந்த பெப்ரவரி 1-ம் திகதி இருவருக்கும் தகராறு முற்றியதால் கணவன் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார்.

உடனே மனைவி மீதுள்ள கோபத்தை தனது பிள்ளைகளிடம் காட்டியுள்ளார். முதலில் 7 வயது மகன், அடுத்து 5 வயது மகள் என இருவரையும் முதல் மாடியில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.

இதில், இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர், மூன்றாவதாக, தனது ஒரு வயது பெண் குழந்தையையும் ஜன்னல் வழியாக வீசியுள்ளார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக கீழே கிடந்த சகோதரன் மீது விழுந்ததால் குழந்தை உயிர் பிழைத்துள்ளது.

பிள்ளைகளை கொல்ல முயன்ற குற்றத்திற்காக 36 வயதான தந்தை மீது பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், முதன் முதலாக இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments