ஜேர்மனியில் முதன் முறையாக ‘ஒயின் ராணி’ பட்டம் வென்ற அகதி

Report Print Peterson Peterson in ஜேர்மனி
804Shares

ஜேர்மனியில் அகதியாக வசித்து வரும் சிரியா நாட்டு பெண் ஒருவர் முதல் முறையாக ‘ஒயின் ராணி’ என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

சிரியாவில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு போரை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக Ninorta Bahno(26) என்பவர் ஜேர்மனியில் அகதியாக குடியேறினார்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள Trier என்ற நகரில் குடியேறிய அவர் ஒயின் மதுபானத்தை தயாரிக்கும் தொழிலில் இறங்கினார்.

ஜேர்மனி வரலாற்றில் கடந்த 1930ம் ஆண்டு முதல் தரமான ஒயின் தயாரிப்பவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், Ninorta Bahno கலந்துக்கொண்டார்.

மேலும், தரமான ஒயினை தயாரித்ததற்காக ‘ஒயின் ராணி’ என்ற பட்டத்தையும் அவர் வென்றார்.

இது குறித்து அவர் பேசியபோது, ‘ஜேர்மனியில் அகதியாக நுழைந்தபோது ஆரம்பத்தில் குடிமக்களுடன் பழகுவது கடினமாக இருந்தது.

ஆனால், ஜேர்மன் குடிமக்கள் மிகவும் அன்பானவர்கள். அகதிகளை பரிவாக வரவேற்று ஆதரவு அளித்து வருகின்றனர்.

தற்போது வென்றுள்ள இந்த ‘ஒயின் ராணி’ என்ற பட்டம் ஜேர்மன் குடிமக்களுடன் சிறப்பாக பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக’ Ninorta Bahno நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் வரலாற்றில் ‘ஒயின் ராணி’ என்ற பட்டத்தை ஒரு அகதி பெற்றுருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments