பயணிகள் இரயிலில் புகுந்து கோடாரியால் தாக்கிய மர்ம நபர்: 20 பேர் படுகாயம்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
பயணிகள் இரயிலில் புகுந்து கோடாரியால் தாக்கிய மர்ம நபர்: 20 பேர் படுகாயம்
1017Shares

ஜேர்மனியில் பயணிகள் ரயிலில் புகுந்து மர்ம நபர் ஒருவர் கோடாரியால் தாக்கியதில் பொதுமக்கள் 20 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Wurzburg பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கோடாரியால் அங்கிருந்த பயணிகள் மீது வீசியுள்ளார்.

இதில் அந்த ரயிலில் பயணம் செய்திருந்த பயணிகலில் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி அந்த ரயில் நிலையத்தை தற்போது மூடியுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பொலிசார் உடனடியாக அந்த மர்ம நபரை சுற்றி வளைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாய் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாவரியா மாகாண உள்விவகாரத்துறை அமைச்சர் ஜோய்ச்சிம் ஹெர்மன், தாக்குதலில் ஈடுபட்டவர் 17 வயது ஆப்கான் இளைஞர் எனவும், தற்போது அகதியாக ஜேர்மனியில் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் இடையே பயணிகளில் ஒருவர் அபாயச்சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தவும், குறிப்பிட்ட நபர் ரயிலில் இருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தீவிரத்தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார், அந்த நபரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments