8 குழந்தைகளை கொன்ற தாய்: கண்டுகொள்ளாமல் இருந்த கணவர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
8 குழந்தைகளை கொன்ற தாய்: கண்டுகொள்ளாமல் இருந்த கணவர்
817Shares

ஜேர்மனியில் 8 குழந்தைகளை கொலை செய்த தாயாரின் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

ஜேர்மனியின் பவேரியா நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பெண்மணி, தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொன்று வீட்டிற்குள் மறைத்துவைத்துள்ளார்.

இதனை அருகில் வசிப்பவர்கள் கண்டறிந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அப்பெண்ணின் குடியிருப்பை சோதனையிட்டதில் குழந்தைகளின் உடல்கள் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், மனநலரீதியாக பாதிக்கப்பட்டிருந்த இப்பெண், தனக்கு குழந்தை பிறந்தவுடன், அதனை ஒரு பாலிதீன் பையில் போட்டு கட்டி அறையில் உள்ள டின்களில் அடைத்து வைத்துள்ளார், இதுபோன்ற 6 குழந்தைகளை கொன்றுவிடவே, சந்தேகம் அடைந்த கணவர் கேள்வி எழுப்புகையில், கருக்கலைந்துவிட்டது, குழந்தை இறந்துவிட்டது என பொய்களை சொல்லியுள்ளார்.

வீட்டில் குழந்தை பிறந்துள்ளதால், வேலைக்கு செல்லும் கணவனால் இதனை கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்நிலையில் அடுத்த குழந்தையின் பிரசவத்தின்போது விடுமுறை எடுத்து, தனது மனைவியின் செயல்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் மனைவியை விட்டு பிரிந்து சென்றுள்ளார், அதன்பிறகு இப்பெண்மணி வேறொரு நபருடன் தொடர்பு வைத்தன் மூலம் 2 குழந்தைகள் பிறந்துள்ளது, அதனையும் இவ்வாறே செய்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கணவன் மனைவி இருவருமே குற்றவாளி என நீதிபதி கூறியுள்ளார், மேலும் மனைவி செய்யும் செயல் தவறு என தெரிந்தும் அதுகுறித்து புகார் தெரிவிக்காமலும், கண்டிக்காமலும் இருந்துள்ளார்.

இதனால் அவர் மீது குற்றம் உள்ளது, மேலும் தாயாரும் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார், தற்போது இந்த குற்றம் நிருபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments