நீச்சல் குளங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ஜேர்மனி பொலிஸ் அதிர்ச்சி தகவல்

Report Print Basu in ஜேர்மனி
நீச்சல் குளங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு:  ஜேர்மனி பொலிஸ் அதிர்ச்சி தகவல்
1027Shares

ஜேர்மனியின் லோயர் சாக்சனி மாநிலத்தில் உள்ள நீச்சல் குளங்களில், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அம்மாநில பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, குற்றங்கள் அனைத்தும் வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் குற்றவாளிகள் ஒரு பெரிய குழுவாக சேர்ந்து ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற குற்றங்கள் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பெரும்பாலும் ஒரு தனிநபர் தான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவார். ஆனால், இங்கு அனைத்து குற்றங்களும் குழக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புது விதமான குற்றத்தன்மையாக உள்ளது, குற்றவாளிகள் ஜேர்மனியை சேர்ந்தவர்கள் இல்லை.

கடந்த ஆண்டு வடக்கு மாநிலங்களில் கிட்டதட்ட 50 வழக்குகள் நீச்சல் குளத்தில் இடம்பெற்றதாக பதிவு உள்ளது. 2016ல் ஆறு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் சென்ற ஆண்டு எண்ணிக்கை தற்போதே எட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் சந்தேக நபர்கள் பெரும்பான்மையாக ஜேர்மனி அல்லாதவர்களாக தான் இருப்பர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 103 பாலியல் குற்றங்கள் நீச்சல் குளத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments