"நான் காற்றில் குதிக்க போகிறேன்": உலக அதிசயமான மச்சு பிச்சுவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

பெருவில் உள்ள மச்சு பிச்சு நகரில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த ஜேர்மனிய பிரஜை ஒருவர் 200 மீற்றர் அதாவது 650 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மச்சு பிச்சுவுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒலிவர் பெப்ஸ் என்ற 51 வயதுடைய நபர் அங்கு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்,

அதற்காக சக சுற்றுலாபயணியிடம் ”நான் காற்றில் குதிக்கபோகின்றேன், நினைவுக்காக ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் ” என்று கூறியுள்ளார்.

இவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மற்றைய நபர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கையில், இந்நபர் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார் என கஸ்கோவில் உள்ள மச்சு பிச்சு பொறுப்பாளர் சந்தோஸ் மாமனி தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் புகைப்படம் எடுத்த இடம் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடம் என கொஸ்கோவின் பிராந்திய அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பள்ளத்தில் இருந்து பெப்ஸை மீட்டு பின் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை கொஸ்கோவிற்கு புகையிரதத்தின் ஊடாக அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

15 ஆம் நூற்றாண்டில், சூரியனை வழிபாடு செய்வதற்காக புனித தலமான மச்சு பிச்சு கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மச்சு பிச்சு தலம் தற்போது தென் அமெரிக்காவில் உள்ள பிரபல புனித தலமாக திகழ்ந்து வருகின்றது.

1983 ஆம் ஆண்டு, இந்த புனித தலம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின்(UNESCO) மூலம் உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments