வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்த 5 வாலிபர்கள்

Report Print Peterson Peterson in ஜேர்மனி
வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்த 5 வாலிபர்கள்
1796Shares

ஜேர்மனி நாட்டில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண் ஒருவரை 5 வாலிபர்கள் கூட்டாக கற்பழித்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

முனிச் நகரில் பெயர் வெளியிடப்படாத 26 வயதான இளம்பெண் ஒருவர் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதே பகுதியில் வசித்து வந்த 5 வாலிபர்கள் பெண்ணின் வீட்டில் புகுந்து அவரை கற்பழிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இளம்பெண் வெளியே சென்றுருந்த வேளையில் 5 பேரும் அவரது வீட்டிற்குள் புகுந்து காத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இரவு நேரத்தில் பெண் வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் மறைந்திருந்த 5 பேரும் பெண் மீது பாய்ந்து கூட்டாக கற்பழித்துள்ளனர்.

பெண் கடுமையாக போராடியும் அவரால் 5 பேரையும் எதிர்க்கொள்ள முடியவில்லை. விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்ட ஐவரும் அங்கிருந்து தப்பி செல்வதற்கு முன்னதாக அவரது வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

பலகீனமான நிலையில் இருந்தாலும் கூட, அப்பெண் தடுமாறியவாரு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து ஐவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் கடுமையான முயற்சிக்கு பின்னர் ஐவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐவரிடமும் பொலிசார் விசாரணை செய்தபோது, அவர்கள் அனைவரும் 19 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், ஐவர் திருடிச்சென்ற பொருட்களை வாங்கிய 6-வது நபரையும் பொலிசார் தற்போது தேடி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments