கிரிக்கட் மற்றும் ரம்மி போன்ற பல விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு ஒன்லைன் சூதாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகின்றது.
அத்துடன் இவ்வாறான ஹேம்களில் தமது பணத்தை போட்ட பலர் அவற்றினை இழந்த சோகத்தில் அடுத்தடுத்து தற்கொலையும் செய்துகொண்டனர்.
இதனையடுத்து ஒன்லைன் சூதாட்ட ஹேம்களுக்கு தடை விதிக்கவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் இவ் வகை ஹேம்களுக்கு தடைவிதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவினை ஏற்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கு முன்னர் ஆந்திர அரசு இத் தடையை அமுல்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.