2020 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிய ஹேம்

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
51Shares

கணினி விளையாட்டுக்களுக்கு உலகளவில் அதிகமான பயனர்கள் காணப்படுகின்றனர்.

இதனால் கணினி விளையாட்டுத் துறையும் அதிகளவு வருமானம் ஈட்டும் துறையாக காணப்படுகின்றது.

இதற்கு எடுத்துக்காட்டாக Pokemon GO ஹேம் விளங்குகின்றது. இக் ஹேம் ஆனது கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

மிகவும் பிரபலமான இக் ஹேமினால் உலகின் பல பகுதிகளிலும் பல அனர்த்தங்களும் அரங்கேறியிருந்தன.

இதனால் மேலும் மக்கள் மத்தியில் அறியப்பட்ட ஹேமாக மாறியது. இக் ஹேம் ஆனது 2020 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது மூன்றாவது இடத்திலேயே காணப்படுகின்றது.

முதலாவது இடத்தில் PUBG உம் இரண்டாவது இடத்தில் Honor of Kings எனும் ஹேமும் காணப்படுகின்றது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்