உலகிலேயே PUBG ஹேம் பிரியர்களை அதிகமாகக் கொண்ட நாடாக இந்தியாவே இருக்க முடியும்.
அந்த அளவிற்கு அங்கு பல மில்லியன் பயனர்கள் காணப்படுகின்றனர்.
எனினும் சீனாவுடன் ஏற்பட்ட எல்லை முரண்பாடு காரணமாக PUBG ஹேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
PUBG கூட்டுத்தாபனமானது சீனாவின் Tencent நிறுவனத்துடன் இணைந்தே இக் ஹேமினை நிர்வகித்து வந்தது.
எனினும் தற்போது சீனாவின் Tencent நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை PUBG கூட்டுத்தாபனம் முறிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு சீன நிறுவனத்திலிருந்து பிரியும் பட்சத்தில் மீண்டும் இந்தியாவில் PUBG ஹேமிற்கான தடை நீக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது சாத்தியமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.