இன்று உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் கணினி விளையாட்டாக PUBG காணப்படுகின்றது.
மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹேம் ஆனது கடந்த ஒரு வருடத்தில் ஒரு பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.
இந்த வருமான வளர்ச்சி வீதம் 540 சதவீதமாகக் காணப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மில்லியன் டொலர்களாக காணப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது இந்த அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதேவேளை இக் ஹேம் ஆனது மொபைல் சாதனங்களுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை 400 மில்லியன் தடவைகள் இந்த அப்பிளிக்கேஷன் மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் புதிதாக 45 மில்லியன் பயனர்கள் முதல் தடவையாக PUBG ஹேமினை பயன்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.