ஹேம் பிரியர்களுக்கு என்று சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சாதனமே PlayStation ஆகும்.
இச் சாதனம் வெவ்வேறு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
இவற்றில் PlayStation 4 பதிப்பானது உலகளாவிய ரீதியில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
இதன்படி சுமார் 76.5 மில்லியன் PlayStation 4 சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சோனி நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தவிர கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையான மூன்று காலப் பகுதியில் மாத்திரம் 9 மில்லியன் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் இதே காலப் பகுதியில் 2016ம் ஆண்டு 700,000 சாதனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை PlayStation விற்பனையால் மாத்திரம் சோனி நிறுவனத்தின் வருமானம் 617 பில்லியன் யென்னிலிருந்து 718 பில்லியன் யென்னாக அதிகரித்துள்ளது.