ஹேம் பிரியர்களுக்கு Twitch தரும் மற்றுமொரு வசதி!

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
55Shares

கணினி விளையாட்டு பிரியர்களுக்கு ஒன்லைன் ஊடான சேவையை வழங்கும் முன்னணி நிறுவனமாக Twitch விளங்குகின்றது.

இந்நிறுவனமானது தற்போது ஹேம் உலகில் பெரும் புரட்சி ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முன்வந்துள்ளது.

இதன்படி இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தி வருபவர்களுக்கு கணினி ஹேம்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது.

இதனால் ஹேம் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது கணினி ஹேம்களை உருவாக்குபவர்களும் பெரும் நன்மை அடையவுள்ளனர்.

அதாவது ஹேம்களை விற்பனை செய்வதன ஊடாக தன் பங்குதாரர்களுக்கு 5 சதவீத இலாபத்தினை வழங்கவுள்ளதுடன், ஹேம்களை உருவாக்குபவர்களுக்கு 70 சதவீத இலாபத்தினை வழங்க எண்ணியுள்ளது.

மேலும் 4.99 டொலர்களுக்கு மேலாக ஹேம்களை கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட சலுகையையும் அந்நிறுவனம் வழங்கவுள்ளது.

இச் சலுகையானது Twitch Crate என அழைக்கப்படுகின்றது.

இவ்வருடம் ஏப்ரல் மாதமளவில் இருந்து ஹேம்களை கொள்வனவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments