அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Nintendo நிறுவனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் Super Mario Run எனும் ஹேமினை அறிமுகம் செய்திருந்தது.
iOS சாதனங்களுக்காக மட்டும் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த இக் ஹேம் ஆனது பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதிலும் அறிமுகமாகி நான்கு நாட்களில் 4 மில்லியன் தடவைகள் தரவிறக்கங்கள் செய்யப்பட்டு சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் 2017ம் ஆண்டின் ஆரம்பத்தில் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் இக் ஹேம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த தகவலை Nintendo அமெரிக்கா நிறுவனம் டுவிட்டர் ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதேவேளை இக் ஹேமினை தரவிறக்கம் செய்துகொள்வதற்கு முற்பதி செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்திலேயே இக் ஹேம் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை 10 டொலர்கள் செலுத்தி கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.