நான்கு நாட்களில் இமாலய சாதனை படைத்த ஹேம்

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
153Shares

பிரபல கம்பியூட்டர் ஹேம் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Nintendo ஆனது கடந்த வாரம் Super Mario Run எனும் புத்தம் புதிய ஹேம் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

இக் ஹேம் ஆனது அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஹேம் அறிமுகம் செய்யப்பட்ட நான்கு நாட்களி்ல் 4 மில்லியனிற்கும் அதிகமான தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் 140 நாடுகளில் இக் ஹேம் முற்றிலும் இலவசமாக கிடைக்கப்பெறுவதுடன் மொத்தமாக 150 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனிமும் முதல் இரு மட்டங்களை மட்டுமே இலவசமாகப் பெற முடிவதுடன் ஏனைய மட்டங்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்துவது அவசியமாகும்.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டு தரவிறக்கத்தில் சாதனை படைத்த போக்கி மேன் கோ ஹேமின் சாதனையை Super Mario Run முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments