கின்னஸ் சாதனை படைத்த போக்கிமேன் கோ

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
179Shares

தற்போதைய நவீன உலகில் பல கணணி விளையாட்டுக்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், போக்கிமேன் கோ கேமானது அறிமுகமான சில நாட்களிலேயே உலகை பரபரப்பில் ஆழ்த்தியிருந்தது.

மாயை உருவங்களை தோற்றுவித்து அவற்றுடன் மல்லுக் கட்ட வைக்கும் இந்த விளையாட்டினால் உலகின் பல பகுதிகளிலும் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையே பிரதான காரணமாக காணப்படுகின்றது.

இதனால் சில நாடுகளில் இந்த கேமிற்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி போக்கிமேன் கோ ஆனது சில கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

அதில் முதலாவதாக அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாத காலம் நிறைவுற்ற நிலையில் அதிக வருவாயை ஈட்டிய மொபைல் கேம் என்ற சாதனையை தகர்த்தெறிந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

அதாவது இக் காலப் பகுதியில் சுமார் 206.5 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளது.

அடுத்ததாக ஒரு மாத காலத்தில் அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட கேம் என்ற சாதனையையும் கைப்பற்றியுள்ளது.

தரவுகளின் படி இதுவரை 130 மில்லியன் தடகைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலாக சர்வதேச ரீதியில் சுமார் 70 வரையான நாடுகளில் கணணி கேம்களின் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றது.

மேலும் ஒரே மாதத்தில் 100 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக வருமானம் ஈட்டிய ஒரே கேம் என்ற சாதனையையும் போக்கிமேன் கோ தன்னகத்தே கொண்டுள்ளது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments