இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ரசிகர்கள் மட்டுமின்றி இளம் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் இவர் தான் ரோல் மொடல்.
இவரை வைத்து புனே மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று புதிய கேம் ஒன்றை வடிவமைத்துள்ளது.
சச்சின் சாகா (சரித்திரம்) என்ற பெயரில் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தில் விளையாடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நம்மை சச்சினாக உருவகித்துக் கொண்டு கேம் ஆட இதில் வசதியுள்ளது.
அடுத்த ஐந்தாறு மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த கேமை வடிவமைக்க சச்சினும் உதவியுள்ளார்.