Android கைப்பேசிகளை பாதிக்கும் மொபைல் ஹேம்

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
Android கைப்பேசிகளை பாதிக்கும் மொபைல் ஹேம்
291Shares

Pokémon Go ஆனது பரபரப்பான மொபைல் ஹேமாக காணப்படுகின்றது. இது எல்லாராலும் விளையாட முடியாது.

இதன் சர்வதேச பயன்பாடானது சர்வர் கொள்ளளவு சரிசெய்யும் பொருட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இதன் பதிப்புக்களை பல்வேறு வழிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப் பதிப்புகளானது தொலை தூரத்திலிருந்து தொலைபேசியின் தகவல்களை அடுத்தவர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் Hackers க்கு உங்கள் தொலைபேசியை கட்டுப்படுத்தும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இந்த தீங்கிழைக்கும் பதிப்புகள் New Zealand மற்றும் Australia வில் இதன் உண்மையான பதிப்புக்கள் வெளியிடப்பட்டு வெறும் 72 மணி நேரத்துக்குள் வெளியிடப்பட்தாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக இந்த செயலி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆயினும் இதை விரும்புபவர்கள் மூன்றாவது நபர்களிடமிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

நீங்கள் இச் செயலியை பயன்படுத்திக் கொண்டிருப்பவராயின் அது முறையானதா என அதன் அனுமதிகளை ஒப்பிடுவதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments