அட்டகாசமான கேம் வசதிகளுடன் வெளியானது Asus புதிய வகை லேப்டாப்

Report Print Jubilee Jubilee in கணணி விளையாட்டு
அட்டகாசமான கேம் வசதிகளுடன் வெளியானது Asus புதிய வகை லேப்டாப்
175Shares

Asus நிறுவனம் அட்டகாசமான கேம் வசதிகளுடன் ROG வகை புதிய லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Asus ROG GT51 வகை லேப்டாப்பில் Skylake based quad-core Intel Core i7 processor மற்றும் NVIDIA GeForce GTX 900 series graphics processor உள்ளது.

இந்த புதிய ROG வகை லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ள 6 சிறப்பு சாதனங்கள் விளையாட்டு பிரியர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க உள்ளது.

மேலும், இதில் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட குளிர்ச்சியூட்டும் சாதனம் வெப்பத்தால் லேப்டாப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

6th gen Intel Core i7-6700K processor மற்றும் USB 3.1 கொண்டுள்ள இதன் தரவு பரிமாற்ற வேகம் 10GB ஆகும். இதில் Windows 10 OS நிறுவப்பட்டுள்ளது. ஆர்மர்டைட்டானியம் மற்றும் பிளாஸ்மா காப்பர் நிறத்தில் கிடைக்கிறது.

ROG GT51ன் தொடக்க விலை ரூ.3,25,900. தவிர, Asus ROGGL552VW gaming notebookன் விலை ரூ. 82,490. G551VW விலை ரூ. 1,00,490. Asus G752VYன் விலை ரூ.1,79,990.

மேலும், Asus ROG G501VW gaming desktop ரூ.95,490க்கும், ROGG20CB விலை ரூ. 1,22,990க்கும் விற்கப்படுகிறது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments