இதுல நாலு கண்ணு இருக்கு..! நிக்கானின் அட்டகாச கமெரா

Report Print Jubilee Jubilee in கஜெட்ஸ்
435Shares

நிக்கான் (Nikon) கமெரா நிறுவனம் 4 சென்சார்களை கொண்ட அட்டகாச கமெரா ஒன்றை உருவாக்கி உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு நிக்கான் தனது கமெராக்களுக்கு காப்புரிமை கோரியிருந்தது. இதன்படி கடந்த மாதம் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்நிறுவனம் 4 லென்ஸ், 4 சென்சார்களை கொண்ட ஒரு கமெராவை உருவாக்கியுள்ளது. இந்த லென்ஸ்களுக்கான சென்சார்களை பின் பக்கத்திற்கு பதிலாக ஓரத்தில் பொருத்தியுள்ளனர்.

மேலும், இது முந்தைய கமெராக்களை விட மிகவும் மெல்லியதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கமெராவில் கொடுக்கப்பட்டுள்ள 4 சென்சார்களும் இணைந்து ஒரு புகைப்படத்தை எடுக்கின்றன.

பின்னர் அந்த 4 புகைப்படங்களும் ஒரு தெளிவான புகைப்படமாக மாற்றப்படும் புதிய தொழிநுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், வெளிச்சம் குறைவான இடத்திலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த கமெரா வெளியாவது குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

Representational image

மேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments