பிரான்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த தலைப்புச் செய்தி... முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி விடையளிப்பாரா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் மூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க இன்று அமைச்சர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மேக்ரான். பிரான்ஸ் நாட்டின் முக்கிய பத்திரிகையான Journal du Dimanche ஒரு தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது.

அதில், மூன்றாவது பொதுமுடக்கத்தை தவிர்ப்பது இயலாதது என்றும், இந்த வாரம் அது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மக்கள் முன் உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரான்சின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரான Jean-François Delfraissyயும், தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, மூன்றாவது பொதுமுடக்கம் தேவைப்படலாம் என்று கூறியிருந்தார்.

அதுமுதற்கொண்டு, ஜனாதிபதியின் செய்திதொடர்பாளர்கள் விரைவில் ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்கள் முன் ஜனாதிபதி உரையாற்றும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறிக்கொண்டிருந்தார்கள்.

உண்மையாகவே பொதுமுடக்கத்தைத்தவிர வேறு வழி இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்யவேண்டியிருக்கிறது என்று ஜனாதிபதி மாளிகையைச் சேர்ந்த ஒருவரும் தெரிவித்துள்ளார்.

ஆக, ஏற்கனவே நடைமுறையிலுள்ள 6 மணி ஊரடங்கால் ஏதேனும் நன்மை ஏற்பட்டுள்ளதா, நாட்டில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது, மருத்துவமனைகளின் நிலவரம் என்ன, மக்களின் மன நிலை என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்தே மேக்ரான் பொதுமுடக்கம் தொடர்பாக முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்