பிரான்சில் பொது போக்குவரத்துக்களில் இதற்கு தடையா? வெளியான உறுதியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
354Shares

பிரான்சில் பொது போக்குவரத்துக்களில் மக்கள் பயணிக்கும் போது சத்தமாக பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருவதால், இதற்கு விரைவில் தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காற்று மூலம் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது.

இதன் காரணமாகவே மக்கள் பொதுவெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியும் வலியுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், பிரான்சில், பொது போக்குவரத்துக்களில் பயணிக்கும் போது சத்தமாக பேசுவதற்கு தடை விதிக்கவேண்டும் என புதிய கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ இரயில்களில், பேருந்துகளில் சத்தமாக உரையாடுவதால் கொரோனா வைரஸ் காற்றில் வேகமாக பரவுவதாகவும், இதனால் சத்தமாக உரையாடுவதையும், தொலைபேசியில் பேசுவதையும் தவிர்க்கும் படியான ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை i l'Académie de médecine-ல் இடம்பெற்ற சந்திப்பில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது ஆதாரமற்ற தகவல் என்பதால் இந்த கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் இடையில் 1 தொடக்கம் 2 மீற்றர் இடைவெளி விட்டு பயணித்தாலே போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அமைச்சர் Olivier Véran சமீபத்தில், வீட்டில் தயாரிக்கும் துணிகளால் ஆன, முகக்கவசங்களை அணிய வேண்டாம் எனவும், அரசால் பரிந்துரைக்கப்பட்ட முகக்கவசங்களை மட்டுமே அணியும் படி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்