பிரான்சில் கொரோனா சிகிச்சை மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது? மக்களுக்கு அரசு எடுத்துள்ள புது முயற்சி

Report Print Santhan in பிரான்ஸ்
122Shares

பிரான்சில் கொரோனா சிகிச்சை மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய, இணையதளம் விரைவில் அறிமுகப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் 27 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நாட்டில் கொரோனா தாக்கம் இருப்பதால், இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வர கடும் கட்டுப்பாடுகளும், கொரோனா வைரசுக்குரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எங்கெல்லாம் சிகிச்சைமையங்கள் உள்ளன என்பது தொடர்பான தகவல்களையும், இலவச தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சர் Olivier Véran கூறியுள்ளார்.

இந்த இணையத்தளம் மூலமாக மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் கொரோனா சிகிச்சை மையங்கள் எங்கெல்லாம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் வரும் 14-ஆம் திகதி முதல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்