பிரான்சில் இந்த 10 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கில் மாற்றம்! கொரோனா ஆபத்து வலையமாக அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
668Shares

பிரான்சில் புதித்தாக 10 மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் ஊரடங்கு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு விதமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

பிரித்தானியாவி உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸால் இப்போது பிரான்சில் மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இரவு நேர ஊரடங்கில், 10 மாவட்டங்களுக்கு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் இரவு நேர ஊரங்கு நடைமுறையில் உள்ளது. கடந்த வாரத்தில் இருந்து 15 மாவட்டங்களுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த நேர மாற்றம் மேலும் 10 மாவட்டங்களுக்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த 10 மாவட்ட்டங்களும் தற்போது கொரோனா ஆபத்து வலையமாக அறிவிக்கப்பட்டு, இந்த மாவட்டங்களுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்த புதியசட்டம் நடமுறைக்கு வரவுள்ளது.

இரவு நேர ஊரடங்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள்

  • Haut-Rhin
  • Bas-Rhin
  • Côte d'Or
  • Yonne
  • Cher
  • Allier
  • Haute-Savoie
  • Alpes-de-Haute-Provence
  • Vaucluse
  • Bouches-du-Rhône
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்