இந்திய விவகாரங்களில் சீனாவை தலையிட விடமாட்டோம்: எச்சரிக்கும் ஐரோப்பிய நாடு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1165Shares

இந்திய விவகாரங்களில் சீனா தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது பிரான்ஸ்.

இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் தூதரக ஆலோசகரான Emmanuel Bonne, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கெதிராக சீனா கேம் ஆடுவதை அனுமதிக்கமாட்டோம் என்றார்.

எப்போதெல்லாம் இந்தியாவுக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இதை நாங்கள் தெளிவுபட தெரிவித்துள்ளோம் என்று கூறிய Emmanuel, அது காஷ்மீர் விவகாரமானாலும் சரி, நாங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்துள்ளோம்.

வழக்கம்போல கேம் ஆடும் சீனாவை நாங்கள் கேம் ஆட அனுமதித்ததில்லை. இமயமலை விடயத்தில் நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையை பாருங்கள், நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.

வெளிப்படையாகவும், சீனாவுக்கு தனிப்பட்ட முறையிலும் நாங்கள் தெரிவிப்பதுஎன்னவென்றால், நாங்கள் எப்போதும் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளோம் என்பதுதான் என்றார் Emmanuel.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்