பிரான்சில் வரும் 15-ஆம் திகதி முதல் ஊரடங்கு அமுல்! எவரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை:எச்சரிக்கும் அரசு

Report Print Santhan in பிரான்ஸ்
1121Shares

பிரான்சில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், வரும் 15-ஆம் திகதி உள்ளிருப்பு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, ஊரடங்கு அமுலாக இருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால், வரும் 15-ஆம் திகதி முதல் மாலை 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.

இந்த ஊரடங்குக் காலத்தில், வேலை, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டாலும், அதற்கான உரிய அத்தாட்சி பத்திரம் அவசியம்.

இந்தக் காலப்பகுதியில், மிகவும் கடுமையான வீதிச் சோதனைகளைக் பொலிசார் மேற்கொள்வார்கள் என்றும், மீறுபவர்களிற்கு மிகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

வருட இறுதி நாளான டிசம்பர் 31-ஆம் திகதி கூட இர 8 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் விதிவிலக்குகள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 24-ஆம் திகதி இரவு மட்டும் ஊரடங்கு தளர்தப்படும். அதே சமயம் இரவு நேர ஊரடங்கின் போது எவருக்கும் வெளியில் செல்ல அனுமதி இல்லை.

உள்துறை அமைச்சர் Gérald Darmanin இது குறித்து கூறுகையில், வரும் டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை வெளியில் செல்ல எவ்வித அனுமதி பத்திரங்களும் தேவையில்லை. ஆனால் இரவு 8 மணிக்கு அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும். வெளியில் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை என கூறியுள்ளார்.

மேலும், இரவு 8 மணியின் பின்னர் ஒரு சிலருக்கு மாத்திரம் அனுமதி உள்ளது. வேலைக்குச் செல்லவும், வேலை முடித்து வீடு திரும்பவும் மாத்திரமே அனுமதி உண்டு. வேறு எந்த காரணத்துக்காகவும் வெளியில் செல்ல முடியாது.

எதிர்வரும் 15-ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்படல் வேண்டும்.

மருத்துவ மனைகள், மருந்தகங்கள், விமான நிலையங்கள் போன்ற அத்தியாவசியமான சேவைகள் தவிர்ந்த, மற்றவை அனைத்தும் இரவு 8 மணிக்குள் மூடப்படல் வேண்டும்.

இரவு 8 மணிக்கு மூடப்படும் வரத்தக நிலையங்கள் மற்றும் மூடப்பட வேண்டிய சேவைகளில் பணி புரியவர்கள், தகுந்த அத்தாட்சிப் பத்திரத்துடன் இரவு 8 மணிக்குப் பின்னர் வீடு நோக்கிச் செல்ல முடியும்.

அத்தியாவசியச் சேவைகளில் பணி புரிபவர்கள் அத்தாட்சிப் பத்திரங்களுடன், சேவை முடியும் நேரத்திற்குப் பின்னர் அத்தாட்சிப் பத்திரத்துடன் வீடு செல்ல முடியும்.

எக்காரணம் கொண்டும் எந்தவிதமான வர்த்தக நிலையங்களும், இரவு 8 மணிக்குப் பின்னர் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், கடுமையான கட்டுப்பாடுகள், மற்றும் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்