விதி மீறல் அம்பலம்! கூகுள், அமேசானுக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்த பிரான்ஸ்

Report Print Basu in பிரான்ஸ்
187Shares

விதி மீறிலில் ஈடுபட்ட அமெரிக்க நிறுவனங்களான கூகுள், அமோசனுக்கு பிரான்ஸ் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது.

ஆன்லைன் குக்கீகள் விதிகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்தற்கு 100 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்ததாக பிரான்ஸ் தரவு தனியுரிமை கண்காணிப்புக் குழுவான CNIL தெரிவித்துள்ளது.

இதே விதிகளை மீறியதற்காக அமேசானுக்கு 35 மில்லியன் யூரோ அபராதம் விதித்ததாக CNIL அறிக்கையில் தெரிவித்துள்ளது.

CNIL உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், அமோசன் நிறுவனங்கள், முன் அனுமதியைப் பெறாமல் மற்றும் போதுமான தகவல்களை வழங்காமல் பயனர்களின் கணினிகளில் விளம்பர குக்கீகளை வைத்ததற்காக தண்டிக்கப்பட்டனர்.

தளங்களில் காண்பிக்கப்படும் விளம்பர பேனர்கள், குக்கீகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றை எவ்வாறு மறுப்பது என்பது குறித்த தெளிவான தகவலை கூகுள், அமோசன் நிறுவனங்கள் பயனருக்கு வழங்கவில்லை என CNIL குறிப்பிட்டள்ளது.

பிரான்ஸ் அதிகாரிகள் டிஜிட்டல் நிறுவனங்களை பெரிய அபராதங்களுடன் குறிவைப்பது இது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு, நிதி மோசடி விசாரணையைத் தீர்ப்பதற்கு கூகுள் சுமார் 1 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் என்று பிரான்ஸ் கோரியது, பின்னர் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நிறுவனத்திற்கு 150 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்