பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி கொரோனாவுக்கு பலி: பிரித்தானிய இளவரசி டயானாவுடன் இணைத்து பேசப்பட்டவராம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
483Shares

பிரான்ஸை நாகரீக யுகத்துக்கு வழி நடத்திய முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaing, தனது 94ஆவது வயதில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

கடந்த மாதங்களில் இதய பிரச்சினைக்காக பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Giscard, தன் குடும்பத்தார் சூழ, Loire பகுதியிலுள்ள தனது வீட்டில் இயற்கை எய்தினார்.

அவரது உடல் நிலைமை மோசமடைந்து, கொரோனாவின் தாக்கம் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தார், அவரது விருப்பப்படியே, Giscardஇன் உடல் தனிப்பட்ட முறையில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

1974 முதல் 1981 வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த Giscard, தனது 48ஆவது வயதில் ஜனாதிபதியானார்.

Giscard, தனது நல்ல நண்பராக இருந்த ஜேர்மன் சேன்ஸலரான Helmut Schmidt உடன் இணைந்து ஐரோப்பிய நாணய அமைப்பை உருவாக்கினார், அதாவது இன்றைய ஐரோப்பிய கரன்சியான யூரோவின் முன்னோடி அது எனலாம்.

பிரான்ஸ் ஜனாதிபதி முதல் ஏராளமானோர் Giscardக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

அதிகாரப்பூர்வ மற்றும் தொண்டு நிறுவனங்கள் தொடர்பான சந்திப்பின்போது பிரித்தானிய இளவரசி டயானாவை சந்தித்த Giscardக்கும் டயானாவுக்கும் தவறான தொடர்பு இருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்