பிரான்சில் மருத்துவ வரலாற்றில் இதுவே முதல் முறை! உடனடியாக மாற்றப்பட்ட இதயம்

Report Print Santhan in பிரான்ஸ்
312Shares

பிரான்சில் மருத்துவ வரலாற்றிலே, முதல் முறையாக, அதி விரைவுத் தொடருந்தான TGV-யில் கொண்டு வரப்பட்டு, மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரான்சில் மருத்துவ வரலாற்றில் அதி விரைவுத் தொடரில் இருந்து கொண்டுவரப்பட்டு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மிக அவசரமாக மருத்துவமனையில், மாற்றப்பட வேண்டிய இதயம், அதனை வழங்கியவரின் இடத்திலிருந்து மிக விரைவாக கொண்டு வரப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மிகவும் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட வேண்டிய இதயம், வழக்கமாக விமானம், அல்லது ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆனால் வானிலை சரியில்லாத காரணத்தினால், இந்த மாற்று இதயத்தை, TGV- யில்(இரயில்) நான்கு மணி நேரத்திற்குள் கொண்டு வரச் செய்து, மருத்துவர்கள் சிகிச்சையை திறமையாக முடித்துள்ளனர்.

நோன்சி நகரத்தில் இறந்த ஒருவரின் இதயத்தை, குடும்பத்தாரின் அனுமதியுடன் எடுத்து, உடனடியாக பத்திரமாகக் கொண்டு வரப்பட்டு, பொலிசார் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்